தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்தை பாடவேண்டும்., தமிழக அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அந்த உத்தரவில், அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட ஆடியோ மூலம் இசைக்கப்படுவதாகவும், இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

எந்தவித தமிழ் உணர்வோ, தேசப்பற்றோ இல்லாமல் இயந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும், எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுகிறது.

இனிவரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக விழாவை நடத்துவோர் இதற்கென பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பாடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் "

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN GOVT ORDER FOR THAMIZH THAI VAZHTHTHU


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->