6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள தேர்வுகளில் திருக்குறள் வினாக்கள் கட்டாயம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2016-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அதிகாரங்களில் உள்ள திருக்குறள்களை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது. 

அதன் படி 2017-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு 1050 திருக்குறள்களை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு பெயரளவிலேயே உள்ளது.

ஆகவே 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலின் 1050 திருக்குறள்களை இடம் பெறச்செய்ய உத்தரவிட வேண்டும். இது தேர்விலும் கேள்விகளாக இடம் பெற உத்தரவிட வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தப்போது அரசு தரப்பில், அனைத்து வகுப்புகளுக்கும் திருக்குறள் பாடமாக்கப்பட்டுள்ளது. திருக்குறள், அதன் பொருள் விளக்கம் போன்ற அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்வுகளிலும் வினாக்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt order thirukural questions compulsary in 6 to 12 th class all exams


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->