மகளிர் உரிமைத்தொகை.. விண்ணப்பிப்பது எப்படி.. விண்ணப்ப படிவம் வெளியீடு.!
TN govt release Womens 1000 rupees scheme application
மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்டும் கலைஞர் உரிமை தொகைக்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதி மகளிர்க்கு மலந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்த நிலையில் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து நேற்று தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் என பலருடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து இந்த திட்டத்தில் உரிய பயனார்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிமை தொகை வழங்க வேண்டும் எனவும் அதில் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக மாவட்ட ரீதியாக முகாம்கள் நடத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இல்லம் வீடு தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள் இந்த திட்டத்தின் பயனாளர்களை கணக்கெடுக்க உட்படுத்த உள்ளனர்.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த படிவத்தில் மொத்தம் 13 இடங்களை நிரப்ப வேண்டும்.
அதன்படி, இந்த விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், திருமணமான நிலை, சொந்த வீடு/வாடகை வீடு, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், வங்கியின் பெயர், வங்கி கிளையின் பெயர், வங்கி கணக்கு எண், குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள், சொத்து விவரங்கள், நில உடமை விவரங்கள், வாகன விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது
சொத்து விவரம், நில உடமை மற்றும் வாகன விவரங்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது
மேலும், இறுதியாக 11 உறுதிமொழிகளுடன் விண்ணப்பதாரர் கையெழுத்திட வேண்டும். மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பட 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
அதேபோல் ஒரு குடும்ப அட்டையில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
யாருகக்கெல்லாம் உரிமைத் தொகை வழங்கப்பட மாட்டாது.
பயனாளிகள் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது.
பயன்பெறும் மகளிர்க்கு ஐந்து ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கக் கூடாது.
பெண் எம்எல்ஏக்கள் எம்பிகள் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாது.
ஓய்வூதியதாரர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது.
English Summary
TN govt release Womens 1000 rupees scheme application