மாணவர்களை கூடுதலாக கணக்கு காட்டி முறைகேடு! பள்ளிக் கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறையில் ஐஏஎஸ் தரத்தில் உள்ள அதிகாரிகள், இயக்குனர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள், பள்ளி ஆய்வு, முதன்மை கல்வி அலுவலகத்தை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மாதத்திற்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று, தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் மாவட்டம் தோறும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை ஐந்தாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அண்மைக்காலமாக தமிழக அரசு மற்றும் அரசின் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. 

மேலும் முறைகேடாக மாணவர்கள் எண்ணிக்கையை கூடுதலாக பதிவு செய்து, நலத்திட்ட உதவிகளை பெற்றதாகவும் சர்ச்சை எழுந்ததை அடுத்து, தற்போது இந்த அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt School Education Dept Order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->