மீண்டும் மீண்டுமா! ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் இந்த மாதமும்...! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய ரேஷன் பொருட்களை செப்.5-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், கடந்த மே மாதம் முதல் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு காரணமாக பல குடும்ப அட்டைதாரர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ரேசன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை செப். 5 வரை பெற்றுக்கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் பாமாயில், துவரம் பருப்பை அடுத்த மாதம் 5-ந்தேதி வரையில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt TN Ration Shop Dal and Oil Aug


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->