தூத்துக்குடி கொடூர விபத்து! தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், முக்காணி கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த நட்டார் சாந்தி (50), அமராவதி (58), பார்வதி (35) ஆகியோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், மூவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.3 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், முக்காணி கிராமம், தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில், சாலையோரமாக நின்று, தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இன்று காலை 6.30 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த முக்காணி கிராமத்தைச் சேர்ந்த நட்டார் சாந்தி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அமராவதி மற்றும் பார்வதி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இந்த துயரகரமான செய்தியை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்துள்ளதாகவும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சண்முகதாய் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt MK Stalin announce for Thothukudi Car Accident Womens Dies


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->