ரூ.5 கோடி இழப்பீடு! தமிழக வரலாற்றில் முதல் முறையாக விபத்தில் பலியானவருக்கு இழப்பீடு!
TN History 1st time Insurance amount 5 cr
கடந்த 2023 ஆம் ஆண்டு, நாகப்பட்டினம் திருச்சி சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில், அபுதாபியில் பணியாற்றும் பொறியாளர் கவுதம் பலத்த காயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர், வழக்கு பதிவு செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் வழக்கை சமரசம் செய்தது.
இதன் மூலம், கவுதமின் குடும்பத்திற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது. தமிழகத்தில் இதுவே முதல் முறையாக இத்தகைய அதிக அளவிலான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
கவுதம் அபுதாபியில் பணியாற்றிய போது, மாதம் ரூ.3.25 லட்சம் சம்பளம் பெற்றதினால், அவரின் குடும்பத்துக்கு இவ்வளவு பெரிய இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
TN History 1st time Insurance amount 5 cr