மக்களே உஷார்! தமிழகத்தில் புதுவித பண மோசடி! எச்சரிக்கும் சென்னை போலீஸ் கமிஷனர்! - Seithipunal
Seithipunal


பரிசு கூப்பன் என்ற பெயரில் பணம் மோசடி நடப்பதாகவும், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து உள்ளர். 

இது குறித்த அவரின் அந்த விழிப்புணர்வு செய்தியில், "சைபர் கிரைம் குற்றவாளிகள் நாள்தோறும் தங்களது குற்றத்தின் வகைகளை மாற்றிக் கொண்டு புது யுக்திகளை கையாண்டு மோசடியில் ஈடுபடுகின்றனர். 

அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் 9-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பரிசு போட்டி நடத்தியதாகவும், அதில் நீங்கள் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கடிதம் வீட்டுக்கு அனுப்பப்படுகிறது. 

அமேசான் லோகோவுடன் வரும் அந்த கடிதத்தில் ஸ்மார்ட் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஸ்மார்ட் போன், மடி கணினி, ரொக்க பணம் ஆகியவை பரிசாக விழுந்தி ருப்பதாக குறிப்பிட்டு இருக்கும். 

மேலும் அந்த கடிதத்துடன் ஒரு ஸ்கிராட்ச் கூப்பன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த கூப்பனை ஸ்கிராட்ச் செய்து அதில் உள்ள குறியீடுகளை அதில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும். 

அதை நம்பி பொதுமக்கள் அந்த கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும் போது எதிர்முனையில் பேசும் நபர், பரிசு பொருட்களை அனுப்புவதற்கு ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு வரிகள் செலுத்த வேண்டும் என்று கூறுவார்கள். 

இதை நம்பிய பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆன்லைன் மூலமாக பணத்தை செலுத்துவார்கள். ஆனால் பணத்தை பெறும் நபர், கைப்பேசியை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு தொடர்பை துண்டித்து விடுவார். 

இதன் பின்னரே பணம் செலுத்திய பொது மக்களுக்கு தங்களிடம் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவரும். எனவே இது போன்ற மோசடிகளில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள எச்சரிக்கையுடனும், விழிப்புடனும், இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN New Money Scam warning


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->