தமிழக டிஜிபி பெயரில் மோசடி- எச்சரிக்கும் டிஜிபி அலுவலகம் ..! - Seithipunal
Seithipunal


தமிழக டிஜிபி பெயரில் பரவும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.  

தமிழ்நாட்டில் ஆன்லைன் முறையிலான மோசடி நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில்,  இந்த மோசடியில் பெரும்பாலான மக்கள் தங்களது பணம், சுய விபரங்களை பறிகொடுத்து வருகின்றனர். 

இந்த மோசடியை தடுப்பதற்காக காவல்துறை மற்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக டிஜிபி பெயரில் பரவும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு டிஜிபி அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது. 

தமிழ்நாட்டின் டிஜிபியான சைலேந்திரபாபு  பொதுமக்களின் பாதுகாப்புக்கு கருதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில், 

காவல்துறை தலைமை இயக்குநர் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு போலி நபர்கள் அமேசான் அன்பளிப்பு கூப்பன்கள் வாங்கி அனுப்பும்படி 'வாட்ஸ்-அப், SMS குறுஞ்செய்தி அனுப்பவதாக தெரிய வருகிறது. 

இந்த போலியான குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம். இதுபோன்ற போலி குறுஞ்செய்திகளை அனுப்புவோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி குறுஞ்செய்திகளை அனுப்பும் அந்த நபரை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN POLICE ALART TO TN PEAOPLE


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->