நாடக காதலனால் சீரழிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த போலீஸ்! பெங்களூரை அதிரவைத்த சம்பவம்!
Bangalore Minor Girl Abused Lover And Police Cop
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பொம்மனஹள்ளியில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் விக்கி என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தாயிடம் கூற, அவர்கள் பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது அங்கு பணிபுரிந்த காவலர் அருண், சிறுமிக்கு நீதி வாங்கித் தருவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் கூறி நம்ப வைத்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் அருண் சிறுமியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று போதை கலந்த மதுவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டியுள்ளார்.
தற்போது சிறுமி தாயிடம் நடந்ததை கூற, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அருண் மற்றும் விக்கி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
Bangalore Minor Girl Abused Lover And Police Cop