அயோத்தி ராமா் கோயில் | நாளை தமிழகம் முழுவதும் தடை - காவல்துறை அதிரடி!
TN Police announce for Ayodhya Ramar temple live
நாளை அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை நடைபெறுகிறது.
இந்த கோலாகல விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, நாட்டின் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்க உள்ளனா்.
இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஜன.22 அயோத்தி கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழ்நாடு காவல்துறை தடைவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் திருமண மண்டபம் உள்ளிட்ட பொது இடங்களில் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை நேரலை செய்ய அனுமதி இல்லை என்று தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் அறநிலையத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி நேரலை செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் அறக்கட்டளை கோயில்கள், மடங்கள் போன்றவற்றில் ராமர் கோயில் திறப்பு விழாவை நேரலை செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
English Summary
TN Police announce for Ayodhya Ramar temple live