'தமிழ்நாடு போலீஸ்' : தமிழக போலீசாரின் சீருடையில் புதிய சின்னம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காவலர் முதல் டி.ஜி.பி. வரை அவரவர் அதிகாரத்துக்கு ஏற்ப சீருடையில் சின்னங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த வகையில் டி.ஜி.பி.யின் சீருடையில் தோள் பட்டையில் ஐ.பி.எஸ் என்ற எழுத்தும் அசோக சின்னம், வாள், சிறியதடி உள்ளிட்டவை பொறிக்கப்பட்டிருக்கும். 

இதனை போன்றே கூடுதல் டி.ஜி.பி சீருடையிலும் இந்த அடையாளங்கள் உள்ளன. தமிழக காவல் ஆய்வாளரின் சீருடையில் 3 ஸ்டார்களும், துணை காவல் ஆய்வாளர் சீருடையில் 2 ஸ்டார்களும் இடம் பெற்றிருக்கும். ஏட்டுவின் சீருடையில் 3 பட்டைகள் போடப்பட்டிருக்கும். 

இந்த நிலையில் தற்போது 'தமிழ்நாடு போலீஸ்' என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புதிய சீருடை சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய சின்னத்தை தமிழக காவலர் முதல் டி.ஜி.பி. வரை அனைவரும் அணிந்து கொள்வார்கள்.

இந்த புதிய சீருடை சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், அசோக சின்னம் மற்றும் தேசிய கொடி போன்றவையும், காவல் என்ற வார்த்தைகள் தமிழில் இடம் பெற்றுள்ளது. இதற்கான தொடக்க விழா விரைவில் நடைபெறவுள்ளது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Police new logo in uniform


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->