#கும்பகோணம்:: போலீஸ் கையை கடிக்கும் ரவுடி.."உஷாரான காவல்துறை".. ஹெல்மெட் அணிவித்து ஆஜர்..!! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த தமிழரசன் என்பவர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்து பல நாட்களாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கும்பகோணம் நீதிமன்றம் தமிழரசனுக்கு 5 வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதனை அடுத்து நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் ரேகாராணி தலைமையிலான போலீசார் தமிழரசனை தேடி வந்த நிலையில் சாக்கோட்டை பதுங்கி இருந்த அவரை நேற்று இரவு சுற்றி வளைத்து போலீசார் பிடிக்க முயன்றனர்.

அப்பொழுது தமிழரசன் போலீசாரின் கையை கடிக்க முயன்று உள்ளார். இருப்பினும் துரிதமாக செயல்பட்ட போலீசார் தமிழரசனை கைது செய்து அவருடைய தலையில் ஹெல்மெட் அணிவித்தனர். ஏற்கனவே பல வழக்குகளில் கைது செய்யப்பட்ட பொழுது தமிழரசன் காவல்துறையினரை கடித்துள்ளதால் இந்த முறை போலீசார் உஷாராக ஹெல்மெட் மாட்டி விட்டனர். 

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தமிழரசன் கும்பகோணம் முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Police produced rowdy in court wear helmet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->