தமிழகத்தின் 29 மாவட்டங்களில்... சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 29 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இரவு 7 மணி வரை திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், குமரி உள்ளிட்ட தமிழகத்தின் 29 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இரவு 7 மணி வரை திருவண்ணாமலை, பெரம்பலூர், கரூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், நாமக்கல், சேலம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 29 மாவட்டங்களில் இடைமின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ள அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக என்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம்பட்டி வானிலை முன்னறிவிப்பின் படி, நாளை (மே 23) தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவை, திருப்பூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வருகின்ற 24-ஆம் தேதி 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Rain alert 22 05 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->