ஜில்லுனு ஒரு நியூஸ்: அடுத்த 3 மணி நேரத்துக்கு... 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!
TN rain update
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தேவை இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இன்று இரவு 10 மணி வரை மேற்கண்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.