முன் ஊக்க ஊதிய உயர்வு கோரிக்கை நிராகரிப்பு – பள்ளிக் கல்வித் துறை விளக்கம்!
TN School Education Announce
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள், முன்னதாக அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை பெற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன், துறை இயக்குநர் ச.கண்ணப்பனுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியாளர்கள், 2020 மார்ச் 10-ம் தேதிக்கு முன்பு சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களுக்கு முன் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்" என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது.
இதனை அடுத்து, 2021 மார்ச் 30க்குள் வழங்கப்பட வேண்டும் என அரசால் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த காலக்கெடு முடிவடைந்துவிட்டது. மேலும், இது அரசின் கொள்கை முடிவாகும். எனவே, தற்போது முன்னதாக அறிவித்த ஊதிய உயர்வை வழங்கும் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
TN School Education Announce