அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு...!! ஆனால் 5ம் வகுப்பு வரை விடுமுறை...!!
Tn Schools will open today after exam holiday
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகள் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடந்தன. இதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு ஒட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகள் தொடங்குகின்றன.
![](https://img.seithipunal.com/media/SCHOOL 0001.png)
அந்த வகையில் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் வழக்கம்போல் வகுப்புகள் தொடங்குகின்றன. மேலும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளதால் 1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி 5ஆம் தேதி பள்ளி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Tn Schools will open today after exam holiday