இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம் - உயர்கல்வித்துறை!
tn UG Education Tamil Subject Must
அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-ஆவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, தாய் மொழியான தமிழ் மொழியினை மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும் எனவும், தாய் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் மாணவர்களை ஊக்குவித்து வருகிறது.
இந்த நிலையில், சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என புகார் எழுந்ததை அடுத்து அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் மொழி கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து உயர்கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில் தெரிவித்ததாவது,
"சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும்.
அனைத்து வகை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 2-ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ்மொழி தேர்வு கட்டாயம் இடம்பெற வேண்டும். இதற்காக பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்திட்டங்களை சரிவர தேர்வு செய்து முறைப்படுத்தி தமிழ் தேர்வுகளை நடத்த வேண்டும்". என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
tn UG Education Tamil Subject Must