100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்.. அப்போ "வாடகை வீட்டிற்கு?".. TNEB விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஒரே முகவரியில் ஒன்றைக்கும் மேற்பட்ட மின்னிணைப்பு வைத்திருப்பவர்களின் விவரங்களை ஒன்று சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மின்வாரிய ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததற்கு தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களின் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. 

பொதுமக்களுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரியில் பெற்ற மின் இணைப்புகளுக்கு ரத்து செய்துவிட்டு ஒரே ஒரு மின் இணைப்புக்கு மட்டும் இலவச மின்சாரம் வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இதனால் பொதுமக்களும் மின்வாரிய ஊழியர்களும் அதிர்ச்சிக்கு ஆளான நிலையில் அதனை தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் மறுத்துள்ளது. 

தமிழ்நாடு அரசு வழங்கும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என வெளியான தகவலை மறுத்து உள்ள மின்சார வாரியம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மட்டுமே மின்வாரியம் செயல்படுகிறது. வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் முற்றிலும் வதந்தி வீடுகளுக்கு வழங்கப்படும் இலவசம் மின்சாரம் தொடரும். 

வாடகை வீடு வைத்திருப்போர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடர்ந்து பெறலாம். ஆனால் வீட்டின் உரிமையாளர் வீடு வாடகை விடாமல் மற்றொரு இணைப்பின் மூலம் 100 யூனிட் இலவசம் மின்சாரம் பெற்றால் அது ரத்து செய்யப்படும். 

வாடகை வீடு வைத்திருப்போர் தங்கள் விவரங்களை மின்சார வாரியத்திடம் சமர்ப்பித்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNEB explain 10 unit free electricity not cancelexplain 10 unit free electricity not cancel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->