இனி "3 நாட்களுக்குள்" மின் இணைப்பு.! - வெளியான சூப்பர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பொதுவாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து மின் இணைப்பு பெற நுகர்வோர்கள் விண்ணப்பித்து பல நாட்களுக்கு பிறகு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வரும் நிலையில் அதனை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

அதனை பரிசீலனை செய்த தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி புது மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

வீடு, கடைகளை உள்ளடக்கிய குறைந்தழுத்த பிரிவில் மின்மாற்றி அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும். ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் 7 நாட்களுக்குள் மின் வினியோகம் வழங்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டுள்ள அறிவிப்பு தேர்தல் முடிந்த நிலையில் இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNERC ordered electric connection give within 3days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->