எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய சிக்கல்.."களம் இறங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை".. தமிழக அரசு அனுமதி..!!
TNgovt allowed anti corruption dept to investigate EPS
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த 2017 முதல் 2011 வரை அதிமுக ஆட்சி காலத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் ரூ.4,000 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் விதி மீறல் நடந்ததற்கான ஆதாரம் உள்ளதாகவும், முறைகேடு நடந்ததாக புகார் உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற லஞ்ச ஒழிப்புத் துறையின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்தார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
TNgovt allowed anti corruption dept to investigate EPS