சதுரடிக்கு ரூ.1000 - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை,கோவை மாநகராட்சியில் சதுரடிக்கு ரூ.1000- நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விவசாய நிலம் மற்றும் மனை நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

சென்னை, கோவை மாநகராட்சியில் குறைந்தபட்ச குடியிருப்பு மதிப்பு சதுர அடிக்கு 1000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஆவடி, தாம்பரம், ஒசூர், காஞ்சிபுரம் மாநகராட்சியில் சதுர அடிக்கு 800 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் மாநகராட்சியில் சதுர அடிக்கு 700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர். கரூர் மாநகராட்சியில் 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி, தஞ்சாவூர். சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சியில் 500 ரூபாயும், கடலூர் மாநகராட்சியில் 400 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள மனையிடங்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு 300 ரூபாயாகவும், அனைத்து பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு 200 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுர அடியிலும் வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Announce For Minimum Lad value amount 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->