#BREAKING || பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் 10 மடங்கு உயர்ந்தது..!! ஜூலை 10ம் தேதி முதல் அமல்.!! - Seithipunal
Seithipunal


கடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் பொழுது வணிக மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இந்திய முத்திரை சட்டத்தில் மாநிலத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது. அந்த மசோதாவில் முத்திரைத்தாள் கட்டணம் உட்பட பல்வேறு கட்டண உயர்வுகள் இடம் பெற்றிருந்தன.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் ரூ.20க்கான முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200 ஆகவும், ரூ.100 ஆக இருந்த கட்டணம் ரூ.1,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளான நிலையில் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் தமிழக அரசு மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் அளிக்கப்பட்டு வரும் சேவைக்கான கட்டணத்தை கடந்த 20 வருடங்களாக மாற்றம் செய்யப்படாததால் தமிழக அரசு சேவை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசசாமி வெளியிட்டுள்ளார். 

அந்த அறிவிப்பில் "பத்திர பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே பத்திரப்பதிவு துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவணன் நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளை பொறுத்து கட்டண விகிதங்களை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பதிவு சட்டம் 1908இன் பிரிவு 78 இல் கட்டண விவர அட்டவணையில் இருந்து 20 இனங்களுக்கான கட்டண வீரங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரு.20/-லிருந்து ரூ.200/- எனவும், குடும்ப நபர்களுக்கு இடையான செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000/-லிருந்து ரூ.10,000/- எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000/-லிருந்து ரூ.40,000 எனவும், தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200/-லிருந்து ரூ.1,000 எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ரூ.10,000 என்று உள்ளதை சொத்தில் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றி அமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும. இது 10.07.2023 முதல் நடைமுறைக்கு வருகிறது" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt announced 10 times hike in deed service charges


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->