இனி தமிழக அரசுப் பேருந்துகளில் 50% பயண கட்டண சலுகை - அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கலைஞர்களுக்கு அரசுப் பேருந்துகளில் 50% பயண கட்டண சலுகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கலைஞர்களுக்கு இசைக் கருவிகள், தொழில் கருவிகளை கட்டமில்லாமல் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அன்னமையில் கிராமிய இசை மாணவர் ஆகாஷ்  தமிழக அரசுப் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் சிவசங்கர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சம்பவத்தின் விவரமும் - அமைச்சரின் விளக்கமும்:

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் என்ற தமிழ்நாடு இசைக் கல்லூரியில் கிராமிய இசைப் பயிலும் மாணவர், தனது இசைக்கருவியுடன் திண்டுக்கல் வடமதுரையில் தனது நிகழ்ச்சியை முடித்து திரும்பும் போது, திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பேருந்தில் தனது இசைக்கருவிகளுடன் பயணம் செய்ய  அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர் இடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் எடுத்து வந்த பொருள் பேருந்து உள்ளே லக்கேஜ் கேரியரில் நீட்டிக்கொண்டு இருந்ததால், இதை மின்விளக்குகள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளை உடைத்து விடும் என்பதால், ஆறு நபர் இருக்கை அருகில் உள்ள இடத்தில் இறக்கி வைக்குமாறு நடத்துனர் கூறியுள்ளார். ஆனால் அவர் தவறான புரிதல் காரணமாக வீடியோ எடுத்துக் கொண்டு தாமாக பேருந்தில் இருந்து இறங்கி சென்று விட்டதாக தெரியவந்துள்ளது.

இசைக்கலைஞர்களுக்கு முழுமையான சலுகைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன்படி தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு ஏற்கனவே 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி கலைஞர்கள் வாத்திய கருவி அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் எடுத்து செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து போக்குவரத்து மேலாண் இயக்குனர்களுக்கும், அதிகாரிகளுக்கும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உள்ளிட்ட அனைவர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இனி இது முறையாக பின்பற்றப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Bus 50 presntsge ticket offer for Art And Culture


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->