வால்பாறை அரசு பேருந்துக்குள் கொட்டிய மழை - 2 பேர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


வால்பாறை அருகே அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகிய விவகாரம் - பொள்ளாச்சி பணிமனையைச் சேர்ந்த உதவி பொறியாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்காத கட்டுமான பிரிவு உதவி பொறியாளர் சுப்பிரமணியம், உதவியாளர் ராமமூர்த்தி ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, மகளிர் விடியல் பயணத்திட்டத்திற்கான புதிய பேருந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்துள்ளார்.

2 புதிய மகளிர் விடியல் பயண நகரப் பேருந்துகள், 8 புறநகரப் பேருந்துகள்  என புதிய பேருந்துகள் சேவையை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Bus Rain suspended Tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->