எல்லாத்துக்கும் அதிமுக அரசு தான் காரணம்! 10 ஆயிரம் பேருந்துகள் - அமைச்சர் சிவசங்கர் சொன்ன செய்தி!
TNGovt Bus Service normalized this year end
தற்போது தமிழகத்தில் இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அகற்றப்படும் 10,020 பேருந்துகளுக்கு மாற்றாக இ-பேருந்துகள், தாழ்தள பேருநதுகள், புனரமைக்கப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட பேருந்துகளை எரிவாயுவில் இயங்கும் பேருந்துகளாக மாற்றி இயக்கத்துக்குக் கொண்டு வந்து ஈடு செய்யப்படும்.\
தமிழக அரசின் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டுக்குள் இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்.
கடந்த அதிமுக கால ஆட்சியில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யும் பணி நடைபெறவில்லை. இதன் காரணமாகத்தான் இந்த அளவுக்குப் பேருந்துகளின் நிலை மாறியுள்ளது.
கடந்த 2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் 15 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்ட பின்னர், கடந்த 2011 முதல் அதிமுக ஆட்சியின்போது வெறும் 14 ஆயிரம் பேருந்துகள்தான் வாங்கப்படுள்ளது. இதனை சரிசெய்ய இன்னும் சிறிது காலம் ஆகும்" என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
English Summary
TNGovt Bus Service normalized this year end