தமிழக அரசு பேருந்தில் சென்றால் பைக், LED டிவி, ஃபிரிட்ஜ் கிடைக்கும்! தமிழக அரசின் குழுக்கள் பரிசு திட்டம்! - Seithipunal
Seithipunal


அரசு போக்குவரத்து கழகங்களில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு குலுக்கல் திட்டம் மூலம் இரு சக்கர வாகனம், குளிர்சாதனப் பெட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறை-2024 நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். 

ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும், மற்ற பத்து வெற்றியாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும்.

சிறப்பு குலுக்கல் முறை: 

OTRS-இன் கீழ் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மூன்று அற்புதமான உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். 

இது 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளும் இச் சிறப்பு குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். பரிசுகள் "சிறப்பு குலுக்கல்" பொங்கல்-2025 பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு பின்வருமாறு 

முதல் பரிசு : இரு சக்கர வாகனம் 
2வது பரிசு : LED SMART TV
3 வது பரிசு : குளிர்சாதனப் பெட்டி

வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டும் மற்றும் ஒரு சிறப்பு குலுக்கல் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களை தவிர்த்து எளிதாக பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Bus SETC


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->