அமைச்சர் ஆவாரா பொன்முடி? ஆளுநருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை.!!
TNGovt cases against GovernorRavi hearing in sc
சொத்து குவப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது அடுத்து அவர் தனது திருக்கோவிலூர் எம்எல்ஏ பதவியை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி இழந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்ததோடு ஒரு மாதத்திற்குள் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என அறிகுறித்து இருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் பொன்முடி செயல்படுவார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதனை அடுத்து திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி மீண்டும் செயல்பட தொடங்கியதால் அவரை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து செய்து வைக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் வழங்கினார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த தமிழக ஆளுநர் ரவி பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நிரபராதி என உச்ச நீதிமன்றம் கூறவில்லை எனவும், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக இருக்கக் கூடாது என்பதற்காக உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியிருக்கலாம் என தமிழக அரசுக்கு ஆளுநர் மாளிகை கடிதம் எழுதி இருந்தது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் முதலமைச்சரின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடவதாகவும், முதல்வரின் பரிந்துரைப்படி பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஒத்தி வைத்தது. அதன்படி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இன்று நடைபெறும் விசாரணையின் முடிவில் பொன்முடி மீண்டும் அமைச்சரா ஆவரா? அல்லது ஆளுநரின் பதில் கடிதம் உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படுமா? என்பது தெரியவரும்.
English Summary
TNGovt cases against GovernorRavi hearing in sc