கூட்டுறவு சங்க தேர்தல் எப்போது? தமிழக அரசு முக்கிய தகவல்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் வாக்காளர் பட்டியல் குறைகளை சரி செய்யாமல் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தக் கூடாது என தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் "கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் வாக்காளர் பட்டியல் சரி செய்யப்பட்டு ஆறு மாதங்களில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என அரசு தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் வாக்காளர் பட்டியில் உள்ள குறைகளை சரி செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தற்போது அரசு தரப்பு கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த முனைப்பு காட்டி வருகிறது என வாதிடப்பட்டது. இந்த வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடனும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் எடுக்கப்பட்ட வருவதாகவும், வாக்காளர் பட்டியல் சரி செய்யப்பட்ட பிறகு சரியான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மட்டுமே கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருந்து இறந்தவர்களின் பெயர்களை ஒரு மாதத்தில் நீக்குவது தொடர்பாக விதிகளை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு தற்காலிக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அதில் ஏதேனும் ஆட்சேபனை அல்லது திருத்தம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வாதத்தினை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியலை திருத்தாமல் தேர்தல் நடத்தக்கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளனர். இதனால் கூடிய விரைவில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு கூட்டுறவு சங்கத் தேர்தல் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt explained cooperative society election in ChennaiHC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->