அரசு பள்ளிக தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, ரூ. 109 கோடி நிதி விடுவிப்பு - தமிழக அரசு அரசாணை!
TNGovt government school
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி இருந்தது.
நிர்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மற்றும் நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததன் காரணமாக சம்பளம் வழங்ப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2022 அக்டோபர் மாதம் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வந்த லட்சணக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை நிலவியது.
இந்தச் சிக்கல் சில நாட்களில் முழுமையாக சரி செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்களாகியும் இந்தப் பிரச்சனை முழுமையான முடிவுக்கு வரவில்லை என்பது தற்போது தெரிய வருகிறது.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, ரூ. 109 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.