இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலை சம ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவது, உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த இடைநிலை ஆசிரியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். 

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொது தேர்வு நடைபெற்று வரும் சூழலில் அடுத்ததாக இடைநிலைப் பள்ளிகளுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் ஆசிரியர்களின் தொடர் ஆட்டத்தினால் பள்ளிக் கல்வித் துறை அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு சார்பில் இன்று பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் கடந்த 19 நாட்களாக நடந்து வரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt invite secondary school teacher for negotiation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->