தமிழக அரசின் புதிய மதுபான விதிகளுக்கு தடை! பாமக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal



விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அளித்த அனுமதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து தடை விதித்துள்ளது.

பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் புதிய மதுபான விதிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் வீடுகளில் மது விருந்து நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டிருந்தது. தமிழக அரசின் இந்த புதிய மதுபான விதிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழக மக்களும் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனை அடுத்து தமிழக அரசு திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் மது விருந்து நடத்துவதற்கு திருத்தப்பட்ட விதியை ரத்து செய்வதாக அறிவித்தது. இருப்பினும் ஐபிஎல் மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகள், சர்வதேச மாநாடுகளில் மது விருந்து நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி அனுமதி வழங்கி இருந்தது.

இதனை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞரும், சமூக நீதிப் பேரவை தலைவருமான வழக்கறிஞர் பாலு கலியபெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதிகள் வைத்தியநாதன், கலைமதி அமர்வு தமிழக அரசின் இந்த புதிய மதுபான விதிகளை இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணையின் போது, பொது இடங்களில் மதுபானங்கள் பரிமாறுவதற்கு அனுமதிக்கின்ற இந்த விதிகளை, அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் பாலு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற கொடுத்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கருத்து அரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாறலாம் என்று புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

அப்போது வழக்கறிஞர் கே பாலு தரப்பில், பொது இடங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு அரங்குகள் அனைத்தையும் சேர்த்து தான் தடை விதைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். எனவே இது தடை விதிக்க உகந்த கூடிய வழக்கு என்று வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Liquor case Chennai HC order PMK Side


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->