ரூ.1.00 கோடி மீனவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNGovt Order for Fisherman safety and funds
எதிர்பாராமல் கடலில் ஏற்படும் இயற்கை சீற்றங்களின் காரணமாக விபத்தில் சிக்கி 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நிலுவையாக உள்ள 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட ரூ.50.00 இலட்சம் மற்றும் இனிவரும் காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ. 50.00 இலட்சம் ஆக மொத்தம் ரூ. 1.00 கோடி கொண்டு சுழல் நிதி உருவாக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த செய்திக்குறிப்பில், "எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக விபத்தில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் எந்த வருமானமும் இன்றி வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்லும் நிலையில் உள்ளது.
எனவே, மீனவர் நலனில் அக்கரை கொண்டுள்ள இவ்வரசு, அம்மீனவர்களின் துயர் துடைக்க சுழல் நிதியினை உருவாக்கி அதிலிருந்து காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2.00 இலட்சம் (ரூபாய் இரண்டு இலட்சம் மட்டும்) வழங்கும் பட்சத்தில் வாழ்வாதாரம், பொருளாதார ரீதியாக மேம்படுத்திக் கொள்ள பேருதவியாக அமையும்.
எனவே, 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நிலுவையாக உள்ள 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2.00 இலட்சம் வீதம் (ரூபாய் இரண்டு இலட்சம் மட்டும்) நிவாரணம் வழங்கிட ரூ.50.00 இலட்சமும் இனிவரும் காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்காக ரூ. 50.00 இலட்சமும் ஆக மொத்தம் ரூ. 1.00 கோடி கொண்டு சுழல் நிதி உருவாக்கி அரசாணை (நிலை)எண். 112, கால்நடை பராமரிப்பு. பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்(மீன்6)துறை, நாள் 25.09.2023-ல் ஆணைகள் வெளியிட்டுள்ளது.
English Summary
TNGovt Order for Fisherman safety and funds