தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு..!!
TNgovt ordered to transfer 21 IPS officers in TamilNadu
தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். காவலர் நல வாரியத்தின் டிஜிபியாக கருணாசாகர் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா நகர் துணை ஆணையராக ரோகித் நாதன் ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட கண்காணிப்பாளராக சாம்சங் நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அதிஷ் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளராக எஸ். செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக அரவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர் இணை ஆணையாளராக மனோகர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிபிசிஐடி பிரிவு கண்காணிப்பாளராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனராக ராஜத் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary
TNgovt ordered to transfer 21 IPS officers in TamilNadu