அதானி குழும துறைமுகத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திட்டம்.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டுபள்ளியில் உள்ள அதானி குடும்பத்திற்கு சொந்தமான சுமார் 330 ஏக்கரில் துறைமுகம் அமைந்துள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 330 ஏக்கரில் இருக்கும் இந்த துறைமுகத்தை 6,111 ஏக்கராக விரிவு படுத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக வரும் செப்டம்பர் 5ம் தேதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் (TNPCB) திட்டமிட்டுள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அதிமுக ஆட்சியில் துறைமுகம் விரிவாக்க பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது காட்டுப்பள்ளி துறைமுகம் 330 ஏக்கரில் இருந்து 6,111 ஏக்கராக விரிவுபடுத்தப்பட உள்ளது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவும், புலிகாட் ஏரியை மாசுபடுத்தும் எனவும் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக கூறிய காரணங்களை மேற்கோள் காட்டி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt plan to expand Kattupalli Adani Group port


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->