விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரில் யாருக்கு குழந்தை பெறும் குறைபாடு? தமிழக அரசு வெளியிட்ட விசாரணை அறிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு நியமித்த விசாரணை குழு சொல்வது என்ன? வாடகை வாடகை தாயின் உடல்நிலை குறித்தான ஆவணங்கள் இல்லை?

கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி சென்னை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி குழந்தைகளுடன் கூடிய புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார். பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது. 

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமைத்திருந்தார். இந்தக் குழுவின் விசாரணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் "ICMR வழிகாட்டுதல் நெறிமுறைப்படிவாடகை தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிந்தது தம்பதியினருக்கு பதிவு திருமணம் 11-03-2016 இல் நடைபெற்றதாக பதிவுச் சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த திருமணம் பதிவு சான்றிதழின் உண்மை தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டது.

மேலும் தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து மருத்துவச் சான்றிதழ் விசாரணை குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் தம்பதியருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விசாரித்த போது 2020 அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார். குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரித்தபோது அவர் வெளிநாடு சென்று விட்டதாக தெரிவதால் அக்குடும்பம் மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை.

சினை மூட்டை சிகிச்சை சம்பந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் மருத்துவமனையால் முறையாக பராமரிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 2020ல் சினை முட்டை மற்றும் விந்து பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உரைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 2021 ஆம் மாதத்தில் வாடகை தாய் ஒப்பந்தம் போட்டுள்ளது. மார்ச் 2022ல் கருமுட்டைகள் வாடகை தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் 10-09-2022 அன்று தம்பதியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையை தனியார் மருத்துவமனையில் கீழ் கண்ட குறைபாடுகள் இக்குழுவினால் கண்டறியப்பட்டுள்ளது. ICMR வழிகாட்டுதலின்படி மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் வாடகை தாயின் உடல்நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும் ஆனால் இது குறித்து ஆவணங்கள் சரியாக மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை எனவே மேற்கூறிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவர் சேர்க்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை குழு அறிக்கையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரில் யாருக்கு குழந்தை பெரும் தகுதி இல்லை என்று தகவல் வெளியிடப்படவில்லை. மேலும் அதற்கான சான்று அவர்கள் சமர்ப்பித்தார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tngovt release the report nayanthara baby issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->