தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.!!
TNGovt transfer 13 IPS officers
நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி,
1) திருப்பூர் தெற்கு துணை ஆணையர் வனிதா சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2) சிபிசிஐடி ஐஜியாக இருந்த தேன்மொழி தமிழ்நாடு போலிஸ் அகாடமி ஐஜியாக பணியிடமாற்றம்.
3) ராணிப்பேட்டை எஸ்பியாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக் திருப்பூர் தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4) உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுக் குமாரி மதுரை மாநகர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5) கோவை வடக்கு துணை ஆணையராக இருந்த ரோஹித் நாதன் கோவை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6) திருச்சி வடக்கு மாநகர் காவல் இணை ஆணையராக இருந்த வி.அன்பு சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7) காரைக்குடி ஏ.எஸ்.பி ஆக இருந்த ஆர்.ஸ்டாலின் கோவை வடக்கு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8) திருவள்ளூர் மாவட்ட துணை கண்காணிப்பாளராக இருந்த விவேகானந்த சுக்லா திருச்சி வடக்கு மாநகர் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9) அருப்புக்கோட்டை துணை கண்காணிப்பாளராக இருந்த கராட் கரூண் உத்தவ்ராவ் மதுரை தெற்கு மாநகர் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10) தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராக இருந்த ரமேஷ் பாபு சென்னை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11) சென்னை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக இருந்த மகேஷ்வரன் சென்னை மாநகர் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
12) மதுரை வடக்கு மாநகர் காவல் இணை ஆணையராக இருந்த பாலாஜி டிஜிபி அலுவலக ஏ.ஐ.ஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
13) நாகப்பட்டினம் கடல் எல்லை பாதுகாப்பு கண்காணிப்பாளராக இருந்த அதிவீர பாண்டியன் சென்னை மாநகர் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary
TNGovt transfer 13 IPS officers