48 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... புத்தாண்டு பரிசு வழங்கியது தமிழக அரசு...!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் பணியாற்றி வந்த 45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில் 28 பேருக்கு பணி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை துணை ஆணையராக இருந்த மோகன்ராஜ் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி கமிஷனராக ராஜேந்திரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக ஷியாமளாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். 

பெரம்பலூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த மணி ஐபிஎஸ் தற்பொழுது தாம்பரம் துணை ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்பியாகக இருந்த பகலவன் காஞ்சிபுரம் ஏஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் சைபர் கிரைம் ஆணையாக இருந்த பாஸ்கர் தற்பொழுது எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று ஆவடி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு எஸ்பியாக இருந்த ராஜகோபால் தற்பொழுது மயிலாப்பூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இது போன்ற தமிழகம் முழுவதும் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 28 பேருக்கு புத்தாண்டு பரிசாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt Transfer 48 IPS officers across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->