இனி தப்பாவே முடியாது.! சார்பதிவாளர் மீது நடவடிக்கை பாயும்.! பதிவுத்துறை தலைவர் கடும் எச்சரிக்கை.!!
TNgovt warned strict action taken if house registered as vacant land
காலி மனை பத்திரப்பதிவின்போது இடத்துக்கான புகைப்படம் இணைப்பது கட்டாயம்.!
சார்பதிவாளர் அலுவலகங்களில் காலி மனை பதிவின்போது கட்டிடம் இருந்தும் காலி இடம் என பதிவு செய்தால் சார்பதிவாளர் மீது கடும் நடவடிக்கை பாயும் என பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பதிவுத்துறை துணைத் தலைவர், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கட்டிடம் இருப்பது குறித்து ஆவணங்களில் குறிப்பிடாமல் காலி மனைகளாகவே பதிவு செய்யும் நிலை குறித்து புகார் வந்ததால் உத்தரவை அவர் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலி மனை என பதிவுக்கு வரும் ஆவணங்களில் அந்த இடத்தை எளிதில் அறியும் வண்ணம் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கட்டாயம்இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ஆவண பதிவின் போது வீடு இருந்து தற்போது இடித்து விட்டு காலி மனையாக பதிவு செய்யும் நிகழ்வுகளிலும் களப்பணி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் கட்டிடம் இருந்தும் களப்பணி பார்க்காமல் காலி மனைகளாக பதிவு செய்யும் சார்பதிவாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என அந்த உத்தரவில் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
TNgovt warned strict action taken if house registered as vacant land