திடீர் திருப்பம்.. கிணற்றில் இருந்த கத்தி யாருடையது? போலிசார் தீவிர விசாரணை.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மே‌2ம் தேதி காணாமல் போனதாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் சடங்கு மீட்கப்பட்டார். அதனை எடுத்து ஜெயக்குமார் எழுதியதாக இருந்த கடிதங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கடிதத்தை குறிப்பிட்டுள்ள நபர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் ஜெயக்குமார் வீட்டில் தடயங்கள் ஏதும் கிடைக்குமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் ஜெயக்குமார் வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் இருந்து தடயங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக ஜெயக்குமார் செல்போனை தேடி வரும் போலீசார் முக்கிய தடயங்கள் கிணற்றில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த 17 மணிநேரமாக கிணற்றில் இருந்து தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு அந்த நிலையில் திடீர் திருப்பமாக கிணற்றிலிருந்து கத்தி மீட்டப்பட்டு இருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் கத்தி வந்தது எப்படி யாருக்கு வீசியது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேறு ஏதேனும் பொருட்கள் கிணற்றில் உள்ளதா? என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tnpolice recovery knife from jayakumar house well


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->