டார்கெட் வைத்து வசூல் வேட்டையா.? கடும் நடவடிக்கை பாயும்.!! அவதூறு பரப்பவருக்கு காவல்துறை எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்க தமிழக காவல்துறை சார்பில் நிதி திரட்ட வேண்டும் என தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜீவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் தினமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் "31.07.2023 - தேதியிட்ட தினமலர் செய்திதாளின் - பக்க எண் 8-ல் குறிப்பிட்டுள்ள "டீ கடை பெஞ்ச்” பகுதியில், மகளிர் உரிமை தொகை வழங்க "மாஸ்டர் பிளான்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு மாறானது. மகளிர் உரிமை தொகை தர போதுமான நிதி திரட்ட அரசு பல வழிகளில் திட்டமிடுகிறது எனவும், அந்த வகையில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என்று மறைமுக உத்தரவு போட்டிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. 

தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு காவல்துறையோ இது போன்ற எந்த ஒரு உத்தரவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு இலக்கு வைத்து எவ்வித அபராதமும் தமிழக காவல்துறை வசூல் செய்வது இல்லை. இதுபோல், பொய்யான தகவல் பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPolice warn action will taken spread defamation about magalir urima thogai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->