டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமன பரிந்துரை மீண்டும் நிராகரிப்பு.!! காரணங்களை அடுக்கும் ஆளுநர்!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காவல்துறை தலைவராக இருந்த சைலேந்திரபாபு கடந்த ஜூன் 30-ஆம் தேதி ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து சைலேந்திரபாபுவை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமித்த தமிழக அரசு அது தொடர்பான கோப்புகளில் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அனுப்பி வைத்திருந்தது. 

இந்த நியமனத்தில் பல்வேறு விளக்கங்களைக் கேட்டு 2 மாதங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகை அந்த கோப்புகளை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி இருந்தது. அதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு மீண்டும் அதே கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தது.

தமிழக அரசு அளித்திருந்த விளக்கத்தில் திருப்தி இல்லை என கூறி தற்போது தமிழ்நாடு அரசின் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு நியமனம் செய்வதற்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிக்காமல் மீண்டும் நிராகரித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தலைவர் தேர்வு முறை வெளிப்படையாக நடக்கவில்லை என்றும், சைலேந்திரபாபு 62 வயது எட்ட இன்னும் 6 மாதங்களில் உள்ள நிலையில் அவரை நியமனம் செய்வது சரியாக இருக்காது என்றும், இதன் காரணமாக வேறொரு நபரை தேர்வு செய்யுமாறு ஆளுநர் மாளிகை கோப்பு நிராகரித்தற்கு விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC chairman appointment recommendation rejected again by governor ravi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->