டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது.!  - Seithipunal
Seithipunal


வரும் மே 21ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் குரூப் 2, 2ஏ தேர்வில், தேர்வர்கள் அனைவரும் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய அனுமதி இல்லை என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மே 21ஆம் தேதி குருப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெறவுள்ளன. குரூப்2, குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 400 பணியிடங்களுக்கு, சுமாா் 11 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனர். 

தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் நுழைவுச் சீட்டு இன்று  டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மேலும், இன்று குரூப் -2 மற்றும் மற்றும் குரூப் - 2ஏ தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்வுக்கு முகக்கவசம் கட்டாயம், ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை என்ற அறிவுறுத்தல்களை தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "குரூப் 2, 2 ஏ தேர்வெழுதும் தேர்வர்கள், தேர்வறையில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் வரும்போது அடையாளம் காண முகக்கவசத்தை அகற்ற வேண்டும்.

தேர்வர்கள் அனைவரும் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய அனுமதி இல்லை" என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Group 2 and 2A Exam Rule


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->