டிஎன்பிசி குரூப் 2 விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு! - Seithipunal
Seithipunal


TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான நாள் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், நாளை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.8/2024, நாள்:20.06.2024 இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி-II மற்றும் IIA) பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு இணைய வழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் 19.07.2024 11.59 பி.ப என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தொழில்நுட்பக் காரணங்களினால் இணைய வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை என தேர்வர்கள் தெரிவித்து இருந்தனர்.

தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் 20.07.2024 11.59 பிய வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC group 2 july 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->