டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்திருந்தார். மேலும், குரூப்-4 தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

மொத்தம் 7,382 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இதில் 80 இடங்கள் விளையாட்டு கோட்டம் மூலம் நிரப்பப்படும். 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் இதில் அடங்கும்.

மேலும், 7,382 பணியிடங்களுக்கு நடக்கவுள்ள குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 17.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஜூலை 24ம் தேதி நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC group 4 exam last day of apply


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->