குரூப் 2 தேர்வு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!  - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. 

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பணிகளுக்கான முதன்மை இறுதித் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர். 

முன்னதாகவே குரூப் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் சிறிது தாமதமாக தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணம் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என தெரிவித்துள்ளது. 

இந்த குரூப் 2 தேர்வுகள் நகராட்சி ஆணையர், துணைப்பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர் போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 544 6 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC released official notification Group 2 exam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->