இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம்: திருப்பதியில் இருந்து தாயாருக்கு சீர்வரிசை..!
Today Andal Thirukalyanam in Srivilliputhur
2025 ஆம் ஆண்டுக்கான பங்குனி உத்தர திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மதுரை, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்தரம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதாவது பங்குனி மாதம் உத்திரத்தன்று தாயார் ஆண்டாளுக்கும் எம்பெருமான் ரெங்கமன்னாருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது விசேஷம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த 03-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 05.30 முதல் 06.30 மணிக்குள் ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பந்தலில் நடைபெறவுள்ளது.

இதன் போது பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்தும் வழங்கப்படுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள், நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்டாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வஸ்திரங்கள், மங்கலப்பொருட்கள் ஆகியவற்றை சீர்வரிசையாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி சீர்வரிசைகள் நேற்று மாலை 06 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை, மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு, பின்னர் மாட வீதிகள் வழியாக அவை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆண்டாள் கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கட்டுள்ளது.
English Summary
Today Andal Thirukalyanam in Srivilliputhur