செந்தில்பாலாஜியின் வங்கி ஆவணங்களை வழங்க கோரிய வழக்கு - இன்று விசாரணை.! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்களில் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மேல் முறையீட்டு மனு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், வங்கி ஆவணங்களை கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த மனுக்கள் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது வரை தங்களுக்கு வங்கி தொடர்பான விடுபட்ட ஆவணங்களை வழங்கவில்லை என்று தெரிவித்தார். 

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இந்த மனு மீதான உத்தரவை ஜூலை 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதன்படி, இன்று வங்கி ஆவணங்களை வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing senthil balaji bank account document case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->