தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது தீவிரம் அடைந்து உள்ளது. சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியாளர்கள்  பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து இந்த விமுறையை ஈடு செய்யும் விதமாக இன்று சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும் என்று, தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்தது.

 இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுவதால் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக   வரும் 30ம் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today is a holiday for schools in tenkasi district district collector announcement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->