பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில நாட்களாக நீலகிரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று நீலகிரியில் இரவு முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்தது.

இந்த நிலையில் இன்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டுமின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் வருத்தமடைந்துள்ளததாக கூறப்படுகிறது.

அதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என நேற்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மற்றும் விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today is a holiday only for schools due to heavy rains in Nilgiri district


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->